யாழில் கைதான மாணவர்கள் விடுதலை



யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை மாணவர்கள் 50 பேர் இன்று புதன்கிழமை பகல் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு முன்பாக பொதுமக்களின் அமைதியை சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கின் போர் என்கிற கிரிக்கெட் சுற்றப் போட்டிக்கான விளம்பரப்படுத்தலுக்காக இன்று காலை முதல் யாழ். நகரைச் சுற்றியும் பாடசாலை மாணவர்களால் அணிவகுப்பு, பேன்ட் வாத்தியங்கள், வாகனத் தொடரணி என்பன நடத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட அதேவேளை, அமைதியும் சீர்குலைந்ததாக முறைப்பாடு வந்ததற்கு இணங்க பொலிஸார் 50 மாணவர்களைக் கைது செய்து விசாரணையின் பின் விடுவித்துள்ளனர்.