#S.Ramasamy.
“தலைநகரில் சிங்கப்பெண்” என்று ஹிருணிக்கா தமிழ் மொழியில் போஸ்டர் அடிக்கிறார். சோஷல் மீடியாவிலும் மீம்ஸ் போடுகிறார். ஏனெனில் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களுக்கு சிங்கள வாக்குகள் இம்முறை பெரியளவு கிடைக்க போவதில்லை.
ஆகவே இவர்கள் இனி தமிழ், முஸ்லிம் வாக்குகளை நோக்கி படை எடுப்பார்கள். இன்னும் சில நாட்களில் இப்படியான ஐதேக சிங்கள வேட்பாளர்கள் பலரை நாம் பார்க்கலாம். இதில் என்ன பிரச்சினை என்றால், தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் சவால்களை சந்திக்கும் போது இவர்கள் எதைவாவது பேசினார்களா? எதையாவது செய்தார்களா? என நாம் சிந்திக்க வேண்டும். ஒன்றும் இல்லை. சும்மா இருந்து விட்டு, இப்போது தேர்தல் என்றவுடன் இவர் “சிங்கப்பெண்” என்று வருகிறார்.
இவருக்கு ஆதரவாகவும் சில தமிழ், முஸ்லிம் நபர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பழசை விடுவோம், இந்த ஆட்சி காலத்தில், தமிழ் மொழியில் தேசிய கீதம், பாடப்படவில்லை . அப்போது, இந்த சிங்கப்பெண் எதையாவது பேசினாரா? சொன்னாரா?
ஆனால் சாய்ந்தமருது என்ற ஊர் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அரசாங்கம், நகரசபையை வழங்கிய போது அதை முதன் முதலில் எதிர்த்தவர் இவர்தான். “சஹரானின் ஊருக்கு தனி ராஜ்யம் ஒன்றை அரசாங்கம் கொடுத்து விட்டது” என பகிரங்கமாக சத்தம் போட்டவர் இவர்தான். இவரது முஸ்லிம் நண்பர் மரிக்காரும் இதே கருத்தை முதலில் சொன்னார்.
தமிழர்களோ முஸ்லிம்களோ தூங்கி விடவில்லை....
விழிப்புடன் தான் இருக்கிறார்கள்...!


Post a Comment
Post a Comment