நுகர்வோர் விசனம்


பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை அதிகரித்து காணப்படுகின்றது .

இன்றைய தினம் (3)கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ,அலைகளின் வேகம் ,காற்றழுத்தம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை .

அதுமாத்திரமின்றி வெள்ளிக்கிழமை(4) இன்று   பெரும்பாலான முஸ்லிம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்லவில்லை .

இதனால்  சூரை ஒரு கிலோ 350 ரூபாய் முதல் 450 வரை விற்பனை செய்யப்பட்டதுடன் முரல் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

 இது தவிர சீலா ,கடல் விரால் கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன .இவ்வாறு இருந்தபோதிலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்திற்குபட்ட மருதமுனை, கல்முனை, பாண்டிருப்பு ,சாய்ந்தமருது பகுதிகளில் அதிகளவான விலை ஏற்றங்கள் தான்தோன்றித்தனமாக சில மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

இதனை கட்டுப்படுத்த நுகர்வோர் விவகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இருந்தபோதிலும் சில மீனவர்கள் மீன்களின் விலை ஏற்றங்கள் காலத்திற்கேற்ப மாறுபடும் என்பது தவிர்க்க முடியாது என தத்தமது  ஆதங்கங்களை தெரிவித்தனர்.