தப்லிக் ஜமாத்தினரின் (ஊநீர்) கொரொன நோயைக் குணமாக்குகின்றது

டெல்லியின் தப்லிக் ஜமாத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணமடைந்த பலர் தங்களின் ரத்தத்தில் இருக்கும் பிளாஸ்மாக்களை (ஊநீர்) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்னும் பலருக்கு அந்த பிளாஸ்மாக்களின் உதவியுடன் சிகிச்சை அளிக்க முடியும்.
இந்தியாவின் பல மாநிலங்களில் தொற்று பரவ தப்லிக் ஜமாத் அமைப்பினரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் தற்போது நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். எனவே தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த முஸ்லிம்கள் பிளாஸ்மா சிகிச்சை முறைக்காக ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை பலன் அளிக்கிறதா குணமடைய உதவுகிறதா என்பதை கண்டறிய டெல்லி மாற்றும் இந்தியாவின் பல மாநிலங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருந்தும் தடுப்பூசியும் உருவாக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்க இந்தியா உட்பட பல நாடுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பிளாஸ்மா சிகிச்சை முறை இதுவரை கொரோனா நோயாளிகளின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லியின் மூன்று அரசு மருத்துவமனைகள் தரப்பில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜமாத் உறுப்பினர்களிடம் இருந்து ரத்தம் எடுத்து சேகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தனிமைப்படுத்தல் முகாம்களில் நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் முதல் கட்டமாக தானாகா முன்வந்து 10 ஜமாத் உறுப்பினர்கள் ரத்த தானம் செய்தனர். இதில் முதலில் ரத்த தானம் செய்தவர் தமிழகத்தை சேர்ந்த ஃபருக் பாஷா. ''எங்களில் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியான பிறகு அனைத்து ஊடகங்களும் எங்களுக்கு எதிராக திரும்பின. ஆனால் இன்று அல்லாவின் அருளால், எங்கள் மீது உள்ள தவறான பிம்பத்தை மாற்ற இந்த பிளாஸ்மா சிகிச்சை முறை உதவும். என் சக இந்தியர்களுக்கு ரத்தம் கொடுத்து உதவுவதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என பிபிசியிடம் பேசிய ஃபருக் பாஷா தெரிவித்தார்.
டெல்லியின் நிசாமுதீன் பகுதியில் மார்ச் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரம் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்தியர்கள் மட்டும் இன்றி 250 வெளிநாட்டினருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் பல மாநிலங்களில் உள்ள கொரோனா முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் ஜமாத் தலைவர் முகமது சாத் காந்த்லாவி மீது காவல் துறையினரால் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பண மோசடி குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ''காவல்துறையினரின் கற்பனையில் உருவானது'' என ஜமாத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூறுகின்றனர்.
ஒரு சில ஊடகங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட தப்லிக் உறுப்பினர்களை ''வைரஸ்'' என்றும் கொரோனா வைரசை பரப்புகிறவர்கள் என்றும் குறிப்பிட்டனர். ''கொரோனா ஜிஹாத்'' என்ற ஹாஷ்டேகும் சமூக ஊடகங்களில் டிரெண்ட் ஆனது. ஜமாத் உறுப்பினர்கள் வேண்டுமென்றே கூடி வைரசை பரப்பியுள்ளார்கள் என்றும் தற்கொலை குண்டுதாரிகளுடனும் ஒப்பிடப்பட்டனர்.
ஆரம்பகட்ட நாட்களில் ஜமாத் உறுப்பினர்களிடம் இருந்து எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது என்பதை இந்திய அரசாங்கம் சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் தினமும் குறிப்பிட்டப்பட்டது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
தப்லிக் ஜமாத் என்ற அமைப்பு முதன்முதலில் இந்தியாவில் 1926ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவின் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தப்லிக் ஜமாத் அமைப்பினர் விமர்ச்சிக்கப்பட்டதால், கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பலர் எதிர்வினையற்ற தொடங்கினர். இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் சமத்துவம் குறித்து பல கேள்விகள் எழுத்துப்பட்டன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ''வைரசுக்கு மதம் கிடையாது'' என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

இந்த தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருபவை. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் தற்போதைய எண்ணிக்கை மேம்படுத்தப்படாமலும் இருக்கலாம்.
மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம்மொத்தம்குணமடைந்தவர்கள்இறந்தவர்கள்
மகாராஷ்டிரம்85901282369
குஜராத்3548394162
டெல்லி310887754
ராஜஸ்தான்226266946
மத்தியப் பிரதேசம்2168302110
உத்திரப் பிரதேசம்195533531
தமிழ்நாடு1937110124
ஆந்திரப் பிரதேசம்118323531
தெலங்கானா100432126
மேற்கு வங்கம்69710920
ஜம்மு & காஷ்மீர்5461647
கர்நாடகம்51219320
கேரளம்4813554
பிகார்345572
பஞ்சாப்3137118
ஹரியாணா2961833
ஒடிஷா118371
ஜார்கண்ட்82133
உத்திராகண்ட்51330
சண்டிகர்40170
இமாச்சல பிரதேசம்40221
சத்தீஸ்கர்37320
அசாம்36271
அந்தமான் & நிக்கோபார் தீவுகள்33110
லடாக்20140
புதுவை830
கோவா770
மணிப்பூர்220
மிசோரம்100

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்
கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 10: 47 IST
இந்நிலையில் பல இந்துக்கள் ஜமாத் உறுப்பினர்களுக்கு தானமாக அளித்த பிளாஸ்மாக்களை நிராகரிக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சமீபத்தில் கொரோனா வைரஸ் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நட்பு குறித்து பேசினார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஜமாத் உறுப்பினர்களின் பிளாஸ்மாக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை அறிவிக்கும் முன்பு, ''ஒரு இந்து கொரோனா வைரஸ் நோயாளியின் உயிரைக்காப்பற்ற முஸ்லிம் ஒருவர் பிளாஸ்மா கொடுத்து உதவினாலோ அல்லது, ஒரு முஸ்லிம் நோயாளிக்கு இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் பிளாஸ்மா கொடுத்து உதவினாலோ எப்படி இருக்கும் என சிந்தித்து பார்த்தேன்'' என்றார்.
''கடவுள் இந்த பூமியைப்படைத்தபோது, மனிதர்களை மட்டுமே படைத்தார். எல்லா மனிதர்களுக்கும் இரண்டு கண்கள், ஒரு உடல், ஒரே சிவப்பு நிற ரத்தம்தான் உள்ளது''. கடவுள் மனிதர்களுக்கு மத்தியில் எந்த தடுப்பு சுவரும் எழுப்பவில்லை'' என்றும் டெல்லி முதல்வர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
வைரஸ் பரவியதற்கு நாங்கள்தான் காரணம் என எல்லோரும் எங்களை சொன்ன சில வாரங்கள் எங்களுக்கு கடினமாக இருந்தது. எங்களை தனிமைப்படுத்தி வைத்திருந்த நாட்கள் முடிந்துவிட்டது. எங்கள் மௌலானா கோரிக்கை விடுத்ததால் நாங்கள் பிளாஸ்மா அளிக்க முன்வந்துள்ளோம் என்றார் ஞாயிற்று கிழமையன்று முதல் பிளாஸ்மா கொடையாளரான அனாஸ் சையத்.
மற்ற மாநிலங்களிலும் நிறைய பேர் ரத்ததானம் செய்ய முன் வந்துள்ளனர். ஜமாத் உறுப்பினரான பர்கத் கலீல் என்பவர் அகமதாபாத்தை சேர்ந்தவர். அவர் மற்றும் அவர் குடும்பத்திலிருக்கும் 8 பேருக்கும் கடந்த மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது நால்வர் பூரணமாக அதிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமான நான்கு பேரும் பிளாஸ்மா தானமாக வழங்கவுள்ளோம் என அவர் கூறியிருந்தார். அவர் ஜமாத் உறுப்பினர்களுக்கு அளித்த சிகிச்சை குறித்து கவலையில் இருந்ததாக தெரிந்தது. "எங்கள் சமுதாயம் அரசியல் ரீதியாக குறி வைக்கப்படுகிறது" என்றார்.
டெல்லியில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களை பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்குமாறு ஜமாத்தின் நெருங்கியவரான மருத்துவர் சோயிப் அலி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். இதற்கு அவ்வளவு ஊக்கப்படுத்துவது தேவையில்லை என்று பிபிசியிடம் அவர் கூறினார். "கடந்த மாதம் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது குணமடைந்துவிட்டனர். அவர்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய தயாராக உள்ளனர். அடுத்த சில நாட்களின் டெல்லியில் 300-400 பேர் ரத்த தானம் செய்ய தயாராக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்," என்றார் அவர்.
டெல்லி அரசு மருத்துவமனையில் வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த பிளாஸ்மா தானம் முடிய நிறைய நாட்கள் ஆகலாம் என்று நினைக்கிறார் மருத்துவர் அலி. "ஞாயிற்றுகிழமை 8 முதல் 10 பேர் மட்டுமே ரத்த தானம் கொடுக்க முடிந்தது. ஆனால் ரத்தம் கொடுக்க முன்னிருப்பவர்கள் பட்டியலில் நிறைய பேர் இருந்தனர். திங்கள் கிழமை 60 பேர் மட்டுமே ரத்த தானம் செய்யமுடிந்தது," என்கிறார் மருத்துவர் அலி.
பிளாஸ்மா தெரபி மூலம் ஒருவர் குணமடைந்தார் என சொன்னதும், குணமடைந்த கொரோனா நோயாளிகளிடம் பிளாஸ்மா தானமாக கொடுக்கக்கோரி கோரிக்கை விடுத்திருந்தார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்.
மருத்துவர் தௌசீஃப் கான் லக்னோவில் அரசு மருத்துவமனையில் தொற்று நோய் துறையில் பணிபுரிபவர். இவர் நாட்டின் முதல் பிளாஸ்மா கொடையாளர்களில் ஒருவர். மார்ச் மாதம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருடைய பிளாஸ்மா பெற்றவர் நன்றாக தற்போது குணமடைந்து வருகிறார் என்றார். "நாங்கள் அனைவருக்கும் பிளாஸ்மா தெரபி கொடுப்பதில்லை. நீரழிவு மற்றும் ரத்த கொதிப்புடன் மிக அவசர நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே கொடுக்கிறோம்" என்றார்.
தப்லிகி ஜமாத்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பிளாஸ்மா தெரபி என்பது மிகவும் எளிதான ஒரு முறை. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 2 முறை கொரோனா இல்லை என வர வேண்டும். பின்னர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி, 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள். அதன் பின் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுமென்றால் ஆர்டி பிடிஆர் என்னும் சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைக்கப்படுவார்கள். அப்போதும் அதன் முடிவு கொரோனா இல்லை என வந்தால்தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியும் என அதை விவரிக்கிறார்.
பிளாஸ்மா என்பது ரத்தத்தில் 55% தான் இருக்கும். அதிலும் 90 சதவீதம் நீர் இருக்கும். மீதமுள்ள 10%தான்
நொதியூக்கிகள் (என்சைம்ஸ்), புரதம் மற்றும் உப்பு போன்றவை இருக்கும். தேவைப்படும் நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கியமான பிளாஸ்மாக்களை மட்டுமே கொடுக்க முடியும். எடுக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் பிளாஸ்மாவிலிருந்து ஒரு நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்கிறார் அவர்.
பிளாஸ்மா தெரபி இப்போதும் டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் வேறு சில மாநிலங்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பிற மாநிலங்கள் அனைத்தும் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள இந்திய அரசின் அனுமதி வேண்டியிருக்கிறது. ஆனால் கோவிட்-19 நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை எப்படி வழங்கப்படும் எனத் தெரியவில்லை. ஏனென்றால் ஞாயிற்று கிழமைதான் தப்லிக் ஜமாத் உறுப்பினர்கள் தாமாக முன் வந்து ரத்த தானம் செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால் -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு கீழ் வைத்திருந்தால் ஒரு வருடம் வரையிலும் -70 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் இருந்தால் 5 வருடம் வரையிலும் பிளாஸ்மாக்களை வைத்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொற்று அதிகரித்து கொண்டே போனாலும் மக்கள் ஆபத்தான நிலைக்கு சென்றாலும் இந்த பிளாஸ்மாக்கள் தயார் நிலையில் இருக்கும்.


Advertisement