அம்பாரை மாவட்ட அரசியல் கள நிலவரம்

தசாப்தங்கள் தோய்ந்த பொத்துவிலின் அரசியல் தாகத்திற்கு இம்முறை நடக்கப்போகும் பாராளுமன்ற தேர்தலிலாவது வழி பிறக்க வேண்டும் என்பது சுமார் 27000+ வாக்குகளை கொண்ட பொத்துவில் மக்களின் பேரவா.

பொத்துவிலுக்கு எம். பிக்கான சாத்தியம் பற்றி ஆய்வதற்கு முன் அம்பாறையின் அரசியல் களம் எவ்வாறு அமையப் போகிறது என்பதை ஆய்வு ரீதியாக நோக்குவோம்.

✔️அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் - 411,570
✔️அதுவே சஜித்திற்கு -260,000 (மட்டமாக)
✔️மேதகு ஜனாதிபதி கோத்தாவிற்கு -135,000
✔️அநுர குமார - 7,000
✔️ஏனையோர் - 10,000 எனும் ரீதியில் அளிக்கப்பட்டிருந்தது.

சஜித்திற்கு விழுந்த வாக்குகளை;
•SLMC -80,000
•ACMC -45,000
•தமிழ் மக்களின் வாக்குகள் - 65,000
•அம்பாறை தொகுதி சிங்கள வாக்குகள்(unp+telephone) - 42,000
•ஏனைய வாக்குகள் - 28,000 என கொள்ளலாம்.

- இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அண்ணளவாக 410,000 வாக்குகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
(எப்படியும் ஜனாதிபதி தேர்தலை விட சற்று குறைவான வாக்குப்பதிவுகள் தான் நடைபெறும். 2015,2010 தேர்தல்களிலும் அவ்வாறுதான்)

அவற்றுள்,
🌷SLPP - 140,000
-ஜனாதிபதி தேர்தலில் அதாவுல்லா அணியினர் அளித்த வாக்குகள் இம்முறை அவர்கள் தனித்து கேட்பதால் கழிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதியின் வெற்றியோடு அதிகரித்துள்ள வாக்குகள் சேர்த்து

☎️Telephone - 105,000
-SLMC இற்கு அதியுச்சமாக 80,000 உம் அம்பாறை தேர்தல் தொகுதியில் ஐ.தே.க. இன் யானைச்சின்னத்திற்கு விழும் வாக்குகள் கழித்து டெலிபோனுக்கு உச்சமாக விழும் 25,000 வாக்குகளும் சேர்த்து)

🦚ACMC - 42,000 (அதியுச்சமாக 50,000 விழலாம்)
🐎NC - 32000 (அதியுச்சமாக)
🏠TNA - 50,000 (அதியுச்சமாக)
🐘UNP - 26,000
🧭NPP(தேசிய மக்கள் சக்தி) -5,000
✔️Others - 10,000

5% வெட்டுப்புள்ளி கணிப்பீடு
410,000*0.05 = 20500

•ஆகவே 20,500 வாக்குகளுக்கு குறைவாக பெற்ற கட்சிகள்/குழுக்கள் ஆசன ஒதுக்கீட்டு கணக்குக்கு சேர்த்துக் கொள்ளப்படாது. ஆகவே 15000 வாக்குகள் கழிக்கப்பட வேண்டும்.

•410,000 - 15,000 = 395,000 வாக்குகள் கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

•395,000/6 = 65,833 வாக்குகளுக்கு ஒரு ஆசனம் வழங்கப்படும்

•முதலாவது சுற்று ஆசன ஒதுக்கீடு

🌷SLPP - 140,000/65,833 = 2 ஆசனம் + மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பெற்றமைக்கான போனஸ் ஆசனம் 1 சேர்த்து மொத்தம் - 3 ஆசனம்
மிகுதி - 8,334 வாக்குகள்

☎️டெலிபோன் - 105,000/65,833 = 1 ஆசனம்
மிகுதி 39,167 வாக்குகள்

•ஏனைய கட்சிகள் எதுவும் முதலாம் சுற்று ஆசன ஒதுக்கீட்டில் ஆசனம் பெற வாக்குகள் போதாது.

•இரண்டாம் சுற்று ஆசன ஒதுக்கீடு;
(மிகுதி வாக்குகளில் அதிகம் பெற்ற கட்சிகளுக்கு இறங்கு வரிசையில் வழங்கப்படும்)
🏠TNA - 50,000 - 1 ஆசனம்
🦚 ACMC - 42,000 - 1 ஆசனம்
☎️ டெலிபோன் - 39,167 - 1 ஆசனம்
🐎 NC - 32,000 - ஆசனம் இல்லை
🐘UNP - 26,000 - ஆசனம் இல்லை
🌷SLPP -8,334 - ஆசனம் இல்லை

மொத்த 7 ஆசனங்களும் சாராம்சமாக;
🌷SLPP-3 ஆசனம்
☎️TELEPHONE - 2 ஆசனம்
🦚ACMC - 1 ஆசனம்
🏠TNA - 1 ஆசனம் என பங்கிடப்படும்.

•ACMC மிக குறைவாக 35000 வாக்குகள் பெற்றாலும் அவர்களுக்கு ஆசனம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
•NC ஆசனம் ஒன்றை பெறுவதற்கு டெலிபோனின் மிகுதி வாக்குகளை விட அதிகமாகபெறவேண்டும். (35000+ பெற வேண்டும்.)

இன்ஷா அல்லாஹ் அமைய போகும் இத்தகைய அம்பாறையின் அரசியல் களத்தில் பொத்துவில் தனக்கான எம்.பி கனவை நனவாக்குவதற்கு இலகுவான சாத்தியமான வழி எப்படி என்று அடுத்த தொடரில் பார்க்கலாம்.

(அடுத்த தொடரோடு கட்டுரையை முடிக்க முயற்சி செய்கிறேன்)

-சல்மான் லாபீர்.
Advertisement