கற்றல் உபகரணங்கள் லழங்கி வைப்பு

வி.சுகிர்தகுமார் 

  பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் வடகிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் பல்வேறு சமூகப்பணிகள் கடந்த 10 வருடகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகர் திருமதி சத்தியரூபன் பாலாராஜியின் வழங்கி வழிகாட்டலில் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை கோரைக்கர் மண்ணின் மைந்தனும் 79 கண்டு பிடிப்புக்களுக்கு மேல் கண்டுபிடித்து தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சாதனை படைத்து பல்வேறு விருதுகளை பெற்றவரும் இளம் விஞ்ஞானி எனும் நாமத்தை பெற்று யாழ் பல்கலைக்கழகத்தில் தொழிநுட்ப பீடத்தில் கல்வி பயின்றுவரும் மாணவனுமான சோ.வினோஜ்குமார் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதற்கமைவாக அறக்கட்டளை நிதியத்தின் ஸ்தாபகரின் புதல்வி சாய்ரூபாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (17) அம்பாரை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான பொத்துவில் ஊறணி பிரதேசத்தில் வாழும் 100 சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவினையும் வழங்கி வைத்தார்.

அத்தோடு 5ஆம் ஆண்டு மற்றும் உயர்தர மாணவர்களுக்கான விசேட கல்வித்திட்டத்திற்கான செயலட்டைகளும் சம்மாந்துறை கோரைக்கர் மகாவித்தியாலயத்தின் சுற்றுவேலி அமைத்தல் உள்ளிட்ட சேவையினையும் முன்னின்று செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இளம் விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.Advertisement