கூகுள் விசிட்டிங் கார்டு அறிமுகம்

 

கூகுள் நிறுவனம் புதிதாக People Cards என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நீங்களும் உங்களை கூகுள் தேடலில் இடம்பெற வைக்கலாம்.


கூகுளில் நமது பெயரைத் தேடினால் வருமா என்று நம்மில் நிறைய பேர் பார்த்திருப்பார்கள். ஆனால், மாறாக அந்த பெயரில் உள்ள பிரபலங்கள் மட்டுமே கிடைப்பார்கள். இந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. இனி உங்கள் பெயரையும் கூகுளில் இடம்பெற வைக்க முடியும்.  இதற்காகவே கூகுளில் People Cards என்ற தேடுதல் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இப்போதைக்கு மொபைல் பயனர்கள் மட்டுமே கூகுள் பிபுள் கார்டு உருவாக்க முடியும். இதற்கு ஜிமெயில் கணக்கும், மொபைல் நம்பரும் தேவைப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கென ஒரு பிபுள் கார்டை தொடங்கலாம்.  கூகுள் தேடுபொறியில் முதல் இடத்தில் இந்த பிபுள் கார்டு இடம் பெறும்.  அதில், பயனரின் பெயர், சமூகவலைதள பக்கங்கள் உள்ளிட்ட விவரங்கள் காணக்கிடைக்கும். 

உதாரணத்திற்கு நீங்கள் பிபுள் கார்டை பதிவு செய்து விட்டீர்கள் என்றால், உங்கள் பெயரை கூகுளில் தேடினால், கூகுளின் முதல் பக்கத்திலேயே நீங்கள் வருவீர்கள். அதில் உங்கள் புகைப்படம், மின்னஞ்சல் முகவரி, மொபைல் நம்பர், உங்களது ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கங்களின் முகவரிகள் இருக்கும்.

இவற்றில் எது தெரிய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அதை மட்டுமே காட்சிப்படுத்தலாம். உங்கள் மொபைல் எண் தெரியக்கூடாது என்று நினைத்தால், செட்டிங்ஸ் சென்று அதை ஆஃப் செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக ஆங்கிலத்தில் மட்டுமே கூகுள் பிபுள் கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  விரைவில் மற்ற மொழிகளில் வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

கூகுள் பிபுள் கார்டை பதிவு செய்வது எப்படி?

1. உங்களுக்கென சொந்தமாக கூகுள் பிபுள் கார்டு பதிவு செய்வதற்கு, உங்கள் மொபைல் மூலமாக கூகுளில் உள்நுழைய வேண்டும். 
2. அதில் ‘add me to search’ என்ற ஆப்ஷன் இருக்கும். 
3. பின்பு ‘Add yourself to Google Search’ என்பதைத் தேர்வு செய்யவும். 
4. இப்போது உங்கள் மொபைல் நம்பரை எண்டர் செய்து, ஓடிபி (OTP) உறுதிசெய்யவும்.

கூகுள் தரப்பில் ஒரு படிவம் கிடைக்கும். அதில் உங்களைப் பற்றிய விவரங்களை சுருக்கமாக டைப் செய்யவும். நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள், என்ன படித்துள்ளீர்கள், உங்களது சமூக வலைதள பக்கங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

google search people card create Google Search
 “Add me to Search” என்பதைத் தேர்வு செய்து கூகுள் பிபுள் கார்டை உருவாக்கலாம்


Advertisement