#அக்கரைப்பற்று கலாநிதி பக்கீர் ஜஹ்பர் ஓய்வு பெறுகின்றார்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த கல்வியலாளர் பேராசான் பக்கீர் ஜஹ்பர் ஓய்வுக்கு வருகின்றார்.

யாழ்ப் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்தாரியான இவர், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரியிலும் உயிரியல் விஞ்ஞானப் பரிவுக்கு அன்று உயிரூட்டியவர்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்வி பீடத்தின் முன்னாள் பீடாதிபதியாகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும், தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும் கல்வித்துறையில் அளப்பெரிய சேவையாற்றிய பேராசிரியர் முனைவர் ப.கா.பக்கீர் ஜஃபார் அவர்கள் நாளை 30.09.2020 ஆந் திகதி ஓய்வு பெறுகிறார்.இவர் கல்வி துறை சார்ந்த பல்வேறு நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரது மேற்பார்வையின் கீழ் ஆய்வுகளை மேற்கொண்ட மாணவர்கள் அனைவரும் கல்வி ஆய்வு தொடர்பாக நிபுணத்துவம் பெற்றவர்களாக மிளிருகின்றனர்.
Advertisement