டிரம்பால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும் ?

 
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கும் சூழ்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடைகளை இங்கே காண்போம்.

டிரம்ப் எந்தெந்த பிரசாரக் கூட்டங்களில் ஈடுபட முடியாது?

டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அக்டோபர் 1ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் 10 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதனால் அக்டோபர் 15ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இடையேயான இரண்டாவது சுற்று விவாதத்தில் அவரால் பங்கேற்க முடியும்.

வெள்ளியன்று ஃப்ளோரிடாவில் நடக்க இருந்த பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

  டிரம்ப் தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் காலத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிரசாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்படும் அல்லது தள்ளி வைக்கப்படும்.

  அதிபர் தேர்தல் எந்த சூழலில் தள்ளி வைக்கப்படும்?

  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதில் இந்த தனிமைப்படுத்தல் நிச்சயமாக ஒரு தாக்கம் செலுத்தும்.

  ஆனால் இதன் காரணமாக அதிபர் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா அப்படி தள்ளி வைக்கப்பட சாத்தியம் உள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

  அமெரிக்க சட்டங்களின்படி நான்காண்டுகளுக்கு ஒரு முறை நவம்பரில் முதல் செவ்வாய்க்கிழமை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்.

  அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மூன்றாம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.

  தேர்தல் தேதியை மாற்ற வேண்டுமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய முடியும். அதிபரால் முடிவு செய்ய முடியாது

  காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

  YouTube பதிவின் முடிவு, 1

  இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  செனட் சபை ஒப்புதல் அளித்தாலும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் இதற்கான ஒப்புதல் கிடைப்பது மிகவும் கடினம்.

  ஒருவேளை தேர்தலைத் தள்ளி வைப்பதற்கு இரண்டு அவர்களும் ஒப்புக் கொண்டாலும் கூட அமெரிக்க சட்டங்களின்படி அதிபரின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே.

  அதன்படி 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி நற்பகலில் டிரம்பின் அதிபர் பதவி தானாகவே முற்றுப்பெறும்.

  இந்தத் தேதியை மாற்ற வேண்டுமானால் அதற்கு அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

  அதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அல்லது மூன்றில் இரண்டு பங்கு மாகாண சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அதன்பின்பு நான்கில் மூன்று பங்கு அமெரிக்க மாகாண அரசுகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

  எனவே இதற்கும் வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

  டிரம்பால் அதிபர் பதவிக்கான வேலைகளைச் செய்ய முடியாமல் போனால் என்ன ஆகும் ?

  Trump and Pence
  படக்குறிப்பு,

  டொனால்டு டிரம்ப் மற்றும் மைக் பென்ஸ் ஆகியோரை அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சி மீண்டும் களமிறக்குகிறது.

  தற்போது அதிபருக்கு மிதமான கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஒருவேளை தனது பணிகளை செய்ய முடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமானால், துணை அதிபரிடம் அதிபர் தனது பொறுப்புகளை ஒப்படைக்க அமெரிக்க அரசு அமைப்பின் 25ஆவது சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது.

  அதன்படி துணை அதிபர், பொறுப்பு அதிபராக செயல்பட முடியும். அதிபர் உடல்நிலை மீண்டும் சரியானால் அவர் மீண்டும் பதவிக்கு வந்து விடலாம்.

  இவை ஏற்கனவே ரொனால்டு ரீகன் மற்றும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அதிபராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவங்களே.

  துணை அதிபரிடம் அதிபர் பொறுப்பை கொள்ளுமாறு கூறும் நிலையில் அதிபரின் உடல் நிலை நல்ல இல்லை என்றால் அமெரிக்காவின் அமைச்சரவை மற்றும் துணை அதிபர் ஆகியோர் பதவியை தொடரும் நிலையில் அதிபர் இல்லை என்று பிரகடனம் செய்துவிட்டு துணை அதிபர் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியும்.

  ஒருவேளை அதிபர் துணை அதிபர் ஆகிய இருவருமே அதிபர் பொறுப்பை கவனிக்கும் உடல்நிலையில் இல்லை என்றால் பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் அந்த பொறுப்புக்கு வரலாம் என அமெரிக்காவின் 'ப்ரெசிடென்சியல் சக்சஷன்' சட்டம் கூறுகிறது.

  Pence wears mask
  படக்குறிப்பு,

  மைக் பென்ஸ்

  தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்சி பெலோசி பிரதிநிதிகள் சபையின் தலைவராக இருக்கிறார்.

  ஆனால் இவ்வாறாக அவர் பதவிக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது பல சட்டப் போராட்டங்களை உருவாக்கும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

  ஒருவேளை நான்சி பெலோசி அந்த பொறுப்பை ஏற்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் ஆளும் குடியரசுக் கட்சியின் மூத்த செனட் சபை உறுப்பினரான சார்லஸ் இ கிரேஸ்லி இடம் அதிபர் பதவியை ஏற்குமாறு கூறலாம்.

  அவருக்கு வயது 87. இத்தகைய முடிவும் சட்ட போராட்டங்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

  டிரம்பால் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால் என்ன ஆகும்?

  ஒரு கட்சியால் அதிபர் தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுபவர் தேர்தல் நேரத்தில் நல்ல நிலையில் என்றால் இல்லை என்றால் அதற்கான சட்டத் தீர்வுகளும் உள்ளன.

   அதிபர் இல்லாதபோது துணை அதிபர் அதிபர் பொறுப்புகளை ஏற்கலாம். ஆனால் ஏற்கனவே குடியரசு கட்சி டிரம்பை தங்கள் அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில் துணை அதிபர் மைக் பென்ஸ் மட்டுமே அந்த கட்சியின் அதிபர் வேட்பாளராக முடியும் என்ற கட்டாயம் இல்லை.

   குடியரசுக் கட்சியின் விதிகளின்படி அக்கட்சியின் தேசிய கமிட்டியின் 168 உறுப்பினர்களும் கூடி புதிய அதிபர் வேட்பாளரை முடிவு செய்யலாம்.

   ஒருவேளை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் தேர்வு செய்யப்பட்டால், புதிய துணை அதிபர் வேட்பாளர் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

   ஆனால் இதுவரை அதிபர் வேட்பாளரை முடிவு செய்த பிறகு குடியரசுக் கட்சியோ ஜனநாயக கட்சியோ வேட்பாளரை மாற்றியதில்லை.

   அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்குபதிவு நடத்த முடியுமா?

   இப்படி நடத்தினால் பல குழப்பங்கள் ஏற்படும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

   ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
   படக்குறிப்பு,

   ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்த ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

   ஏற்கனவே பல லட்சம் பேருக்கு தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்டு விட்டன. சில மாநிலங்களில் நேரடி வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.

   அதன் காரணமாக, வாக்குச் சீட்டில் அதிபர் பதவிக்கு வரத் தகுதியில்லாத வேட்பாளரின் பெயருடனேயே வாக்கு பதிவு தொடர்ந்து நடைபெறும் என்று கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ரிக் ஹேசன் கூறுகிறார்.

   போட்டியில் இருந்து ஒருவர் விலகி விட்டால் வாக்குச் சீட்டில் வேட்பாளர் பெயர் எப்படி மாற்றப்படும்?

   என்ன நடந்தாலும் அதிபரின் பெயர் வாக்குச் சீட்டில் இருக்கும் என்று தேர்தல்கள் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்ற சட்டப் பேராசிரியர் ரிச்சர்ட் பைல்ட்ஸ் கூறுகிறார்.

   தங்கள் வேட்பாளரின் பெயரை வாக்குச் சீட்டில் மாற்ற குடியரசு கட்சி நீதிமன்றத்தை நாடலாம். ஆனால் அதற்கு தற்போது போதிய நேரம் இல்லை என்கிறார் அவர்.
   Advertisement