ஹூவாமி நிறுவனத்தின் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில்

 


ஹூவாமி நிறுவனம் தனது ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் டிசம்பர் 21 ஆம் தேதியாவில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் 1.65 இன்ச் AMOLED ஸ்கிரீன், ஹெச்டி ரெசல்யூஷன், அலுமினியம் பாடி, 3டி கார்னிங் கொரில்லா கிளாஸ், ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.மேலும் இதில் 50-க்கும் அதிக வாட்ச் பேஸ்கள், spo2 மாணிட்டரிங், ஜிபிஎஸ் வசதி, 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் பல்வேறு அசத்தலான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்

- 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
- 3D கிளாஸ்
- ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
- 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள் 
- ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
- ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
- அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி 
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
- ப்ளூடூத் 5.0 LE, வைபை, ஜிபிஎஸ் 
- 3 ஜிபி மெமரி 
- மைக்ரோபோன்
- 246mAh பேட்டரி 

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் தளத்தில் டிசம்பர் 21 ஆம் தேதி துவங்குகிறது.