அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் நாளை முதல் விடுவிப்பு

 


வி.சுகிர்தகுமார் 0777113659 

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9  ஆகிய பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பிரிவுகள் நாளை முதல் விடுவிக்கப்படுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
 ஆயினும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து மக்கள் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு செல்ல தடை. விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்
இதேநேரம் விடுவிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் வாழும் மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதுடன் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்
இந்நிலையில் பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.