கிராமங்கள் தோறும் குழுக்கள்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


கொரோனா வைரஸை ஒழிக்க கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைக்கப்படுவதுடன்  இனிவரும் காலங்களில்  மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு அமைய எதிர்காலத்தில்  நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் குறிப்பிட்டார்.


கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை(18) மாலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தலைமையில் நடைபெற்ற விசேட உயர்மட்ட கூட்டத்தின் பின்னரான செய்தியாளர் மாநாட்டில்   கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்


அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பல்வேறு கோணங்களில்  கருத்துக்களை நாம் பரிமாறிக்கொண்டுள்ளோம்.கல்முனை பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து செல்கின்றதா இல்லையா என்பதை ஆராய்ந்துள்ளோம்.ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் கிராமங்கள் தோறும் குழுக்கள் அமைத்தலை உறுதிப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் நகரங்கள் கிராமங்கள் தோறும் மக்களுக்கு விழிப்பூட்டல்களை செய்தலை மேற்கொள்ளுவதுடன் இனிவரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் இராணுவம் பொலிஸாரின்  பங்களிப்புடன் சுகாதார நடைமுறைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இனிவரும் காலங்களில்  மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைக்கு அமைய எதிர்காலத்தில்  நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளது என்றார்.
--