அக்கரைப்பற்று கொரொனாவின் பிடியிலிருந்து விலகி, மழைக்குள் முடங்கியது

 


வி.சுகிர்தகுமார்   0777113659
 

கொரோனாவின் பிடியிலிருந்து சற்று விடுபட்டுவரும் நிலையில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களி;ல் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகின்றது.

நேற்று மாலை ஆரம்பித்த மழை வீழ்ச்சி இன்று அதிகாலை முதல் பலத்த மழையாக மாறி வருவதுடன் வானம் இருள் சூழந்து மப்பும் மந்தாரமுமாக காணப்படுகின்றது.

கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இருந்து அம்பாரை மாவட்ட மக்கள் சற்று விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் தமது தொழில்களை ஆரம்பிக்க ஆயத்தமாகினர். இந்நிலையில் பலத்த மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மக்களது அன்றாட இயல்பு வாழ்கை நிலை மீண்டுமொரு முறை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் பெய்துவரும் மழையினால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெற்பயிர்கள் குடலை பருவத்தை அடைந்த நிலையில் மழையின்றி சில பகுதிகளில் வேளாண்மை கருகும் நிலையினை அடைந்திருந்தது. இந்நிலையில் தற்போது பெய்துவரும் மழை வீழ்ச்சி பல விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதேநேரம் மழை வீழ்ச்சி  இடைவிடாது பெய்து வருகின்ற நிலையில் நீர்நிலைகள் யாவும் நீரால் நிரம்பியுள்ளதுடன் சில தாழ்நில நெற் செய்கை வயல் நிலங்களும்; முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.;..

பகல் நேரத்தில் பயணிக்கும் வாகனங்களின் முன்விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டு பயணிப்பதையும் அவதானிக்க முடிந்தது.

மேலும் பெய்து வரும் அடை மழையால் தாழ்நிலை பகுதிகளில் உள்ள பல இருப்பிடங்கள் வெள்ளத்தால் சூழும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் சில அரச திணைக்களங்கள் உள்ளேயும் நீர் உட்புகுந்துள்ள சந்தர்ப்பங்கள் உள்ளபோதிலும் இதுவரையில் யாரும் இடம்பெறவில்லை என ஆலையடிவேம்பு பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தாழ்நிலப்பிரதேசங்களில் வாழும் மக்களது கோரிக்கைக்கு அமைய கடலுடன் இணையும் ஆலையடிவேம்பு சின்னமுகத்தவாரம் பகுதி நீர்வடிந்தோடுவதன் பொருட்டு அகழ்ந்து விடுவதற்கான ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றன.