கல்முனை காவல்துறையினரால், விழிப்புணர்வு



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


 கல்முனை  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சேவையில் ஈடுபடும் முச்சக்கரவண்டி, பஸ், லொறி உள்ளிட்ட சகல  வாகனங்களுக்கு 'மீட்டரான வாழ்கை' எனும் தொனிப்பொருளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் இன்று(4)  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக   முன்னெடுக்கப்பட்டது.


குறித்த விழிப்புணர்வு செயற்பாடானது  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் ஆலோசனையில்  அம்பாறை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம் ஜயரட்ன  மற்றும் கல்முனை  பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  கே.எச் சுஜீத் பிரியந்தவின் ஆலோசனையில்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர ,கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன, ஆகியோருடன்   கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான ஸ்ரிக்கர்களை   போக்குவரத்து பொலிஸ் பிரிவு  பொலிஸ் உஉத்தியோகத்தர்கள் வாகனங்களுக்கு ஒட்டினர்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொது வெளியில் நடமாடுவோர் ஒரு மீட்டர் தூர இடைவெளியினை கடைப்பிடிக்குமாறும்  'மீட்டரான வாழ்கை' எனும் வாசகம் கொண்ட ஸ்டிகர்கள் வாகனங்களுக்கு ஒட்டப்பட்டது. அத்தோடு பொது மக்களுக்கும் வாகன சாரதிகளுக்கும் முகக்கவசம் அணிவது தொடர்பாகவும் ஒரு மீட்டர் இடை வெளியை பேணுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மேலும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்பட்டதுடன் இரவு வேளையில் விபத்துக்களை குறைப்பதற்காக வாகனங்கள் துவிச்சக்கர வண்டிகளுக்கு வர்ண ஸ்டிக்கர் ஒட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.