நோய் எதிர்ப்பு சக்திக்கான பானம் வழங்கி வைப்பு


#செய்தியாளர்;றமீஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள அக்கரைப்பற்று பிரதேசத்தின் பொதுச் சந்தைப் பிரதேசத்தினை அண்டிய பகுதியில் நோய்த் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அக்கரைப்பற்று சுதேச மருந்து உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்து தேகாரோக்கியத்தினை தூண்டும்  பானம் தயாரிக்கும் மூலிகை மருந்துப் பொதிகள் குறித்த பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு  இலவசமாக அவர்களது இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விநியோகிக்கப்பட்டன.

கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.ஏ.நபில் தலைமையில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.Advertisement