அக்கரைப்பற்று-சிறுநீரக விஷேட வைத்தியர் றிக்காஸ் றஹீம் FRCS பரீட்சையில் சித்தி(ஐ.எல்.எம்.றிஸான்)
அக்கரைப்பற்றை பிறப்பிடமாகவும் தற்போது ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர்; றிக்காஸ் றஹீம், சிறுநீரக வைத்தியத்துறை (FRCS)  பரீட்சையில்; சித்தியடைந்து, இலங்கை நாட்டுக்கும், தான் பிறந்த அக்கரைப்பற்று மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது பிரித்தானியாவைச் சேர்ந்த மில்டன் கீன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிறுநீரகத்துறை விஷேட வைத்தியராகக் கடமையாற்றும் டாக்டர் றிக்காஸ் றஹீம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), கொழும்பு ரோயல் கல்லூரி என்பனவற்றின் பழைய மாணவரும் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவப் பட்டதாரியுமாவார்.
எடின்பேர்க் பல்கலைக்கழக MRCS, சிறுநீரக வைத்தியத்துறை முதுமாணி பட்டதாரிமான இவர் எடின்பேர்க் வைத்தியக் கல்லூரி OSCE பரீட்சையாளரும், போதனாசிரியருமாவார்.
எடின்பேர்க் பல்கலைக்கழக MSC சத்திரசிகிச்சை விஞ்ஞான பீட போதனாசிரியருமாவார்.
எடின்பேர்க் றோயல் கல்லூரி சத்திர சிகிச்சையாளர் குழுமத்தின் சிறுநீரக சத்திர சிகிச்சை விஷேட குழுவின் அங்கத்தவரான இவர், பிரித்தானிய சிறுநீரக சத்திரசிகிச்சை சங்கத்தின் செயற்குழு அங்கத்தவருமாவார்.
தன்னடக்கமான டாக்டர்; றிக்காஸ் றஹீம், சிறுநீரக விஷேட வைத்திய நிபுணராக பிரித்தானியாவில் சேவையாற்ற வேண்டும் என்பதை தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டுள்ளார்.
தாயகத்துக்கு பெருமை தேடித்தந்த இளம் வைத்தியரின் கனவு நனவாக பிரார்த்திப்போம். இவர் அக்கரைப்பற்று-02. றஹீம் - லியாக்கத்பேகம் ஆசிரிய தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராவார்.