டெல்டா பரவலை தடுப்பதற்கு சாய்ந்தமருது மாணவன் புதிய முகக்கவசம், மருந்து கண்டுபிடிப்பு



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



டெல்டா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து அதனை இலங்கையில் கட்டுப்படுத்தி பரவல் ஏற்படாது உயிரிழப்புகளை குறைப்பதற்காக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் இரு வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு ஆதரவு வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை கோரியுள்ளார்.

இன்று(2) ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டு குறித்த இரு கண்டுபிடிப்பின் நோக்கம் குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு குறிப்பிட்டார்.

அதாவது  எனது பெயர் அப்துல் அமீர் முஹம்மது அதீப். தந்தையின் பெயர் முஹம்மது ஹனீபா அப்துல் அமீர். தாயின் பெயர் -பதுர்த்தீன் முர்சிதா எனக்கு 4 சகோதரர்களும்  சகோதரியும் இருக்கின்றனர். 

நான் அல் ஹிலால் பாடசாலையின் பழைய மாணவன்.அத்துடன்  தற்போது கல்முனை  சாஹிரா பாடசாலையிலும் கல்வி கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

  நான் கொவிட் 19 கொரோனா  வைரஸை கட்டுப்பதுத்தும் முகமாக  மருந்து ஒன்றினை  கண்டு பிடித்துள்ளேன். அது மாத்திரமன்றி  நாட்டில் கொரோனா வீரியமடைந்து டெல்டா  பரவி வருவதன் காரணத்தால்   வைத்தியசாலையில் கடமையாற்றும்  வைத்தியர்களுக்கும் மற்றும் கோவிட் 19 நோயாளிகளும் பாவிப்பதற்காகவும் அவர்களை அந்த கொடிய நோயில் இருந்து தப்புவதற்காகவும்    மாஸ்க் ஒன்றை கண்டுபிடுத்துள்ளேன் .

இதை ஹெல்மெட்(தலைக்கவசம் ) போன்று அணிய வேண்டும். இதை அணிந்தவுடன் மாஸ்க்(முகக்கவசம்)  அணிய தேவை இல்லை. இதை அணியும் வைத்தியார்க ளோ அல்லது நோயாளிகளோ கட்டாயம் கொரோனா பாதுகாப்பு  ஆடை அணிய வேண்டும்.இவ் இரண்டு பொருட்களையும் கண்டுபிடிப்பதற்கு  எனது பெற்றோரும் எனது சகோதர் அஃதீர் மற்றும் எனது தாய் மாமன்கள் ஆசிக், சபீர் மாமி   டாக்டர் எம்.வை. ஆர். பானு, ஆசிரியர் மசுனா உள்ளிட்ட  குடும்பத்தினர் சாஹிரா பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபீர் ஆசிரியர் பாடசாலையின் மூத்த கண்டு பிடிப்பாளர் சவ்பாத் அவர்களும் எனக்கு மிகவும் உதவி செய்தனர் அவர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மேலும் இவ் விரு கண்டுபிடிப்புகளை அங்கீகரித்து எமது நாட்டில் எதிர்காலத்தில் டெல்டா மற்றும் திரிவு படுத்திய கொரோனா வைரஸ் நோயில் இருந்து அனைவரையும் காப்பாற்ற சம்பந்தப்பட்டவர்கள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.