ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார்


 


ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 வது அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளார்

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தலைமையில் எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ளது

கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்குபற்றவுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றும் முதல் சந்தர்ப்பட் இது என்பதுடன் இலங்கைக்கு வெளியில் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் 193 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொரோனா தொற்றை ஒடுக்குவதன் மூலம் உலக ஸ்திரத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், கிரகத்தின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சகவாழ்வை புதுப்பித்தல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துவது கூட்டத்தொடரின் நோக்கமாகவுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியுயோர்க் பயணம் 1