பங்குனி உத்தர சமுத்திர தீர்த்தம்
(காரைதீவு சகா)
கொரோனா காரணமாக 2வருடங்களின் பின்பு நேற்றுமுன்தினம்(16) இரவு அம்பாள் முத்துச்சப்பறத்தில் எழுந்தருளி பாரம்பரிய கலை கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் விநாயகப்பெருமான் முருகப்பெருமான் சகிதம் கிராமத்தில் தேரோடும் வீதிவழியாக வீதியுலா வந்தார்.
ஆண்களும் பெண்களும் வடம்பிடித்து தேர் இழுத்து வெளிவீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் திருவிழாப்பூஜைகளை கடந்த 9தினங்களாக சிறப்பாக நடாத்த தினமும் நற்சிந்தனை சொற்பொழிவு உள்வீதி வெளிவீதி தேருர்வலம் என்று பல சிறப்புகளுடன் திருவிழா இடம்பெற்றுவந்தது.

Post a Comment
Post a Comment