தீர்த்தோற்வசம்



 (சுகிர்தகுமார்)


  கிழக்கு மாகாணம் அம்பாரை  மாவட்டத்தில்  பிரசித்தி பெற்ற பழம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு அருள்மிகு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான வருடாந்த  மகோற்சவ பெருவிழாவின் தீர்த்தோற்வசம் இன்று பக்;தி பூர்வமாக நடைபெற்றது.
கடந்த 08ஆம் திகதி ஆரம்பமான திருக்கொடியேற்றப் பெருவிழாவானது 09ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் நேற்று இடம்பெற்ற சங்காபிசேகம் இன்று இடம்பெற்ற தீர்த்தோற்சவம் நாளை இடம்பெறும் பூங்காவனம் 20ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறுகின்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற வசந்த மண்டப விசேட யாகபூஜைகளை தொடர்ந்து பக்தர்களின் அரோகரா எனும் வேண்டுதலுடன் பக்தர்கள் புடை சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க மாதுமை உடனுறை ஸ்ரீP பாசுபதேசுவரர் தீர்த்தோற்வத்தில் கலந்து கொள்வதற்காக பக்தர்களினால் தேரில் இருத்தி ஆலய தீர்த்தக்கேணிக்கு தூக்கி செல்லப்பட்டார்.
தீர்த்தக் கேணிக்கரையில் அமர்த்தப்பட்ட எம்பெருமானுக்கு அபிசேக பூஜைகள் இடம்பெற்றதுடன் தீர்த்தோற்சவமும் இடம்பெற்றது. ஆலய தலைவர் வ.மேகராசா தலைமையில் இடம்பெற்ற பிரம்மோற்சவ தீர்த்தோற்சவ பெருவிழாவின் பூஜை வழிபாடுகளை உற்சவகால பிரதமகுரு வித்யாசாகர் கிரியாகலாமணி வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்யகிருஸ்ண குமார குருக்கள் மற்றும் சிவஸ்ரீ கணேச திவிஷாந்த குருக்கள் சிவஸ்ரீ க.கஜமோகன் சர்மா சிவஸ்ரீ ஆ.கோகிலராஜ சர்மா குருக்கள் உள்ளிட்டவர்கள் நடாத்தி வைத்தனர்.
வழிபாடுகளில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டனர்.