வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில்,கஞ்சா செடி



 


 பாறுக் ஷிஹான் 


வீடு ஒன்றின் மூன்றாவது மாடியில் இரண்டு  கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை   சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மலையடிக்கிராமத்தில் இரகசிய தகவல் ஒன்றை அடுத்து  பொலிஸார் வியாழக்கிழமை (17) மாலை கைது செய்தனர்.

இவ்வாறு கைதான மலையடிகிராமம் - 4 இனை சேர்ந்த 33 வயதான  செய்னுல் ஆப்தீன் இஸ்ஹாக் என்ற  சந்தேக நபர்  வீட்டின் மூன்றாவது மாடியின் மேல் பூச்சாடிகளுடன் இணைத்து குறித்த இரு  கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன்  கைது செய்யப்பட்ட சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை  பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


--