அன்பளிப்பு



 


கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு.

(காரைதீவு  சகா)


 கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை உபகரணம் ஒன்று அனைத்துலக மருத்துவநல அமைப்பினால் ( IMHO)அன்பளிப்பு செய்யப்பட்டது.


நீண்ட காலமாக கண் சத்திரசிகிச்சைக்காக கண் துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் இல்லாமையினால் பல சிரமங்களை நோயாளிகள் எதிர்நோக்கிவந்தனர்.

 இதனை கருத்தில் கொண்டு கண் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர். என். நிரோஷன் அவர்களின் வேண்டுகோளுக்கி ணங்க ,கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா. முரளீஸ்வரன் அவர்களின் நீண்ட நாள் முயற்சியின் பயனாக, அனைத்துலக மருத்துவநல அமைப்பிலிருந்து 25 இலட்சம் பெறுமதியான கண் வில்லை துல்லியமாக அளவிடும் டிஜிட்டல் இயந்திரம் கிடைக்கப்பெற்றது.

இதனை அனைத்துலக மருத்துவநல அமைப்பு( அமெரிக்கா) சார்பாக இருதய நோய் வைத்திய நிபுணர் டாக்டர். அருள்நிதி ,வைத்திய அத்தியட்சகர் டாக்டர். இரா. முரளீஸ்வரன் அவர்களிடம் கையளித்தார். 

மேலும் இவ் " அனைத்துலக மருத்துவநல அமைப்பு " (IMHO)பல்வேறு இலவச கண் சிகிச்சை முகாம்களை இவ் வைத்தியசாலை யில் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.