கள்ள வியாழை எனுமிடத்தில் பாரிய அன்னதானம்



 


(வி.ரி. சகாதேவராஜா)


கதிர்காம காட்டுப்பாதையில் மத்தியில் இருக்கின்ற கள்ள வியாழை எனுமிடத்தில் பாரிய அன்னதானம் இடம்பெற்று வருகிறது.

 கண்டி தலதா மாளிகை நிலமே பிரதீப் நிலங்க தயாள அவர்களின் ஏற்பாட்டில் இந்த அன்னதானம் 12-வது வருடமாக நடைபெற்று வருகிறது .

நீண்ட தூரம் நடந்து களைத்து வருகின்ற அடியார்களுக்கு இது ஒரு பெரும் வரப் பிரசாதமாக அமைகின்றது.

ஒரே நேரத்தில் ஆயிரம் அடியார்கள் இருந்து உண்ணும் வகையில் பாரிய கொட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் சென்று பசி ஆறி வருகின்றார்கள்