சட்டத்தரணிகள்,வைத்தியர்கள் கிரிக்கிற் சமரில் சட்டத்தரணிகள் அணி வெற்றி



 


மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க அங்கத்தவர்கள் கிரிக்கிற் அணிக்கும் வைத்தியர்கள் அணிக்கும் இடையில் நேற்றைய தினம் 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கிற் போட்டி இடம்பெற்றது.

மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்,சட்டத்தரணிகள் அணியிணர் 7 விக்கிற்றுக்களால், வைத்தியர்கள் அணியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தனர்.



வழங்கப்பட்ட 20 ஓவர்களில், வைத்தியர்கள் அணியினர் 114 ஓட்டங்களைப் பெ்றிருந்தனர்,பதிலுக்கு துடுப்பாடிய சட்டத்தரணிகள் குறித்த இலக்கை 7 விக்கிற்றுக்கள் எஞ்சியிருக்கப் பெற்றனர்.