மூத்த எழுத்தாளர்,தெளிவத்தை ஜோசப் காலமானார்



 


இலங்கையின் மூத்த #எழுத்தாளர் #காலமானார்..!


எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமிபிள்ளை ஜோசப்) காலமாகியுள்ளார்.



இலங்கையின் முக்கிய எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் இன்று உடல்நல குறைவினால் காலமானார். அவருக்கு வயது 88.


பதுளையில் பிறந்த ஜோசப், மலையக வாழ்க்கை படைப்பிலக்கியமாக்கிய முக்கிய ஆளுமையாவார்.

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார். இவரது குடை நிழல் என்ற புதின நூல் 2010 ஆம் ஆண்டுக்கான யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதைப் பெற்றுள்ளது.