வீதியோர விழிப்புணர்வு



 .


சுகிர்தகுமார்  


  நமது நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அக்கரைப்பற்றை தலைமையகமாக கொண்டு செயற்படும் பாதிப்புற்ற பெண்கள் அரங்கம் பெரும் பங்காற்றி செயற்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதுடன் அதனூடாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

தற்போது நாட்டில் வாழும் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துத்துக் கொண்டிருக்கும் இச் சந்தர்ப்;பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக விழிப்புணர்வு வீதியோர நாடகங்களையும் அரங்கேற்றி வருகின்றது.

 இதன் ஒரு கட்டமாக ,இறக்காமம், அட்டாளைச்சேனை , பொத்துவில் ஆகிய  பகுதிகளுக்கு சென்று மூவின சமூகங்கள் இணைந்து வாழும் பிரதேசங்களில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் இளைஞர்கள் குழுவினரால் குறித்த வீதியோர விழிப்புணர்வு நாடகங்களையும் அரங்கேற்றி வருகின்றது.

; பாதிப்புற்ற பெண்கள் அரங்க திட்ட இணைப்பாளர் நடராஜா சுமந்தி  ,திட்ட பொறுப்பாளர் செல்வபதி கங்கேஸ்வரி  ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.றசான் மற்றும் ,உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமட் நபீல், முன்னிலையிலும் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர்; நகீஜா முசாதிர் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையிலும் நேற்று வீதியோர விழிப்புணர்வு நாடகத்தினை நடாத்தியதுடன் இன்று பொத்துவில் சந்தைப்பகுதியிலும்; நடாத்தப்பட்டது.

வீதியோர நாடகத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இறக்காமம் பிரதேச செயலாளர் மற்றும் இறக்காமம் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர்கள் நாடக குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்ததுடன் இதுபோன்ற விழிப்புணர்வு நாடகங்கள் அரங்கேற்றப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் இதனை முன்னெடுக்கும்  பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

இதேநேரம் நாடகத்தினை பார்வையிட்ட மக்களும் இதுபோன்ற சமூக நல்லிணக்க செயற்பாடுகளை வரவேற்பதாக கூறினர்.