வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களை தெளிவூட்டும் ஒரு நாள் செயலமர்வு அம்பாரையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
செயலமர்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சுகத் திசாநாயக்க இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் டுலானி பெனான்டோ தேசிய இடர் முகாமைத்துவ சேவை நிலையத்தின் அம்பாரை மாவட்டத்திற்கான உத்தியோகத்தர் ஏ.எம்.பெரூஸ் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய ஊடக உதவி பணிப்பாளர் ஜானக ஹதுன் பதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் செயலமர்வின் நோக்கம் பற்றி தெளிவூட்டினார்.
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் உரையாற்றுகையில் இச்செயலமர்வை முன்னெடுக்கும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செயலமர்விற்கான நிதி உதவி வழங்கிய வேள் விஷன்ட் நிறுவனத்திற்கும் நன்றி கூறினார்.
அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சுகத் திசாநாயக்க உரையாற்றுகையில் அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாத்தல் அனர்த்தமொன்று ஏற்படும் முன்னர் அறிந்து கொள்ளும் முறைமைகள் எடுக்கப்படவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனர்த்தம் ஏற்படும்போது எடுக்க வேண்டிய நடைமுறைகள் அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் அதிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பிலும் விளக்கினார்.

Post a Comment
Post a Comment