கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை



 


கோழி இறைச்சியின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச் சங்கத்தின் ஏற்பாட்டாளர் சுஜீவ தம்மிக்க மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் பண்டிகை காலத்தில் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கின்றமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் விலை குறைவடைகின்றமையும் இந்த விலை குறைப்புக்கான காரணம் எனவும் சுஜீவ தம்மிக்க மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முட்டையின் விலையை குறைப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.