பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் செயற்பாடுகள்



 .


சுகிர்தகுமார்


  சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகள் அனைத்திலும் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனின் ஆலோசனைக்கு அமைய சின்னப்பனங்காடு மகாசக்திபுர மகாசக்தி பாலர் பாடசாலையில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் கருத்திட்ட முகாமையாளர் கே.சத்தியப்பிரியன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திவாகரன் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வ.சந்திரகுமார் பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் கே.விஜயபாலா மகாசக்தி நிறுவன முகாமையாளர் எஸ்.திலகன் நிதி உதவியாளர் வை. நிரஞ்சலா உள்ளிட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தனவந்தர்களின் உதவியுடன் பெற்றார்களினால் தயாரிக்கப்பட்ட சத்துணவு இலைக்கஞ்சி வழங்கப்பட்டதுடன் வாராந்தம் திங்கட்கிழமை தோறும் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.