இலங்கையில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியர் வாழ்ந்த இடத்திற்கு சித்தர்கள் குரல் அமைப்பு விஜயம்!
அகத்தியர் நீராடிய மகாவலி கங்கையில் மரகதலிங்கத்திற்கு அபிஷேகம்!
2000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழிக்கான "அகத்தியம்" என்ற முதல் இலக்கண நூலை எழுதியவரும் சப்தரிசிகளில் ஒருவருமான சித்தர்களுக்கு எல்லாம் சித்தராக இருந்த அகத்தியர் இலங்கையில் வாழ்ந்த கங்கு வேலி பிரதேசத்திற்கு நேற்றைய தினம் இலங்கை சித்தர்கள் குரல் அமைப்பினர் விஜயம் செய்தனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி ஜி தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கூடிய கிளிவெட்டி கிராமத்திற்கு அருகிலுள்ள கங்கு வேலி எனும் இடத்திற்கு விஜயம் செய்தனர்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜி , மகேஸ்வரன் சுவாமி, கனடாவில் இருந்து இதனை நேரடியாக காண வேண்டும் என வருகைதந்த பிரபல ஆன்மீக பரோபகாரி அன்பர் குமார், காரைதீவைச் சேர்ந்த ஆன்மீக ஆர்வலர்களான கே.ஜெயசிறில், வி.ரி.சகாதேவராஜா மற்றும் தமிழகரன் சனா ,சனுஸ்காந்த், பிரசானந்த் ஆகியோர் பயணத்தை மேற்கொண்டார்கள்.
அங்கு அகத்தியர் ஸ்தாபனம் என் அமைப்பு அகத்தியர் ஆலயம் ஒன்றை அமைத்து, அவர் வழிபட்ட ஆதிசிவனுக்கு ஆலயத்தை பல சவால்களுக்கு மத்தியில் அமைத்து வழிபட்டு வருகின்றார்கள்.
தாபனத்தின் தலைவர் ஓய்வுநிலைஅதிபர் வேலுப்பிள்ளை தவராசா , அங்கு இருக்கின்ற அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் கல்வெட்டுக்கள் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் தடயங்கள் அனைத்தையும் காண்பித்தார்கள்.
தொடர்ந்து அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் காட்டுக்குள்ளால் சென்று அகத்தியர் ஆடி அமாவாசை தீர்த்தமாடிய மகாவலி கங்கை நதி தீரத்திற்கு அழைத்துச் சென்றார்கள் .
அங்கு சிவன் ஆலய பீடம் ஒன்று இருக்கிறது .
அங்கு சித்தர் குரல் அமைப்பினர் முறைப்படி எண்ணெய் வைத்து
மாணிக்க கங்கையில் நீராடி, மரகதலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தனர்.
அதன் பீடத்தில் லிங்கத்தை வைத்து வில்வம் இலைகள் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து பாராயணம் செய்தார்கள். 208 சித்தர்களை வரவழைக்கும் மந்திரம் சிவசங்கர் ஜி யால் ஓதப்பட்டது.
தாபனதலைவர் வே.தவராசா ,சேனையூர் ,பாடசாலை அதிபர் கே.கணேசலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அமுது படைத்தனர்.
-அகத்தியர்
அகத்தியர் என்பவர் "தமிழி" என்ற தமிழ் சித்தர்களில் முதன்மையானவராகவும், சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அறியப்படுகிறார். சிவபெருமானின் திருமணத்தினைக் காண அனைவரும் வடதிசைக்கு


Post a Comment
Post a Comment