பதாதைகள் திறந்து வைப்பு



 


(வி.ரி.சகாதேவராஜா)



சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பெ‌ண்க‌ள் வலையமைப்பானது பெண்கள் சிறுவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் போது தடுப்பதற்கும் பாதுகாப்பதற்கும் உடன் அழைக்க வேண்டிய அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய பெயர் பதாதைகளை திறந்து வைக்கப்பட்டது.


பெண்கள் வலையமைப்பின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி கலைவாணி தயாபரன் தலைமையிலான குழுவினர் இப் பதாதைகளை அந்தந்த பிரதேசங்களுக்கு சென்று பதாதைகளை திறந்து வைத்தனர்.


 பொத்துவில், திருக்கோவில், காரைதீவு ,கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயல்களிலும் இப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வைத்தியசாலைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இப்பணியை மேற்கொள்ள இடமளிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்பட்டது.