(வி.ரி.சகாதேவராஜா)
மலரவிருக்கும் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை கிரிக்கட் உடன் வரவேற்பதற்காகவும், கல்முனைப் பிராந்திய இளைஞர்களுக்கு இடையிலான நட்பு பாலத்தினை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடனும், புத்தாண்டு கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்முனையின் பாரம்பரியம் மிக்க பழைய தனியார் கழகங்களுடன் சில புதிய கழகங்களும் சேர்ந்து மொத்தமாக 07 அணிகள் பங்குபற்றும் இச் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று முன்தினம் (1) சனிக்கிழமை மாலை கல்முனை உவெஸ்லி மைதானத்தில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை உவெஸ்லி பாடசாலை அதிபர் செ.கலையரசன் கௌரவ அதிதிகளாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் , கே. செல்வராஜா , தனு NRT (pvt) ltd மற்றும் இச்சுற்றுத் தொடருக்கான கழகங்களின் உரிமையாளர்களான
நிசேந்திரராஜ், சங்கீத், லோகராஜா, தேவதீசன், சுஜீந்தர், கோபு ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்ப நாள் நிகழ்வை வண்ணமயப்படுத்தி இருந்தார்கள் .
இம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்
DINESH 11 DOMINATORS ,KIMA FIGHTERS ,
SHESHAN 11 LEOPARDS, VRK STALLIONS,
KIRTHIK HAISNU BROS ,
RICH 11 TIGERS ,VETRI VINAYAGAR ஆகிய ஏழு அணிகள் பங்குபற்றுகின்றன.


Post a Comment
Post a Comment