நிலக்கடலை செய்கைக்காக கடனுதவி



 


(வி.ரி.சகாதேவராஜா)

கஞ்சிகுடியாறு கிராமிய பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துமுகமாக
 நிலக்கடலை செய்கைக்காக 28பேருக்கு  தலா 45ஆயிரம் ரூபாய் வீதம் 13லட்ச ரூபாய் கடனாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் வேண்டுகோளுக்கமைவாக   கனடிய நாட்டில் உள்ள சர்வதேச ஐக்கிய மகளிர் அமைப்பின்  நிதி உதவியின் கீழ்  Langa Vision Action Foundation  அமைப்பினரால் கஞ்சிகுடியாறு கிராமிய பெண்கள் நலன்புரி அங்கத்துவர்கள்  28 பேருக்கு  இவ் உதவி வழங்கப்பட்டது. இதில் மொத்தமாக 1,260,000/= வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்  திருக்கோவில் பிரதேச  செயலக உதவிப் பிரதேச செயலாளர்  கந்தவனம் சதிசேகரன் பிரதேச செயலக சமுர்த்தி  தலைமையக முகாமையாளர்  கே.பரமானந்தம் மற்றும் கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்  ஏ.கந்தசாமி   மற்றும்  Langa Vision Action Foundation முகாமையாளர் எஸ்.யுவன் மற்றும் அதன் இணைப்பாளர் மற்றும்  கஞ்சிகுடியாறு கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார   அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.