பட்டமளிப்பு நிகழ்வு



 


🛑ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு காத்தான்குடியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.


பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பங்கேற்பு.


(செய்தியாளர், பாத்திமா ஸஹ்னா)


காத்தான்குடி ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் 2025ம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வுகள் காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் வெகு சிறப்பாக நேற்று மாலை இடம் பெற்றது.


காத்தான்குடி, ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் ஷாஸ் இன்டர்நேஷனல் அகாடமியின் பணிப்பாளர் முனஸ்ஸா முனீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பங்கேற்று சிறப்பித்தார்.


இதன் போது டிப்ளோமா இன் மேகப், டிப்ளோமா இன் டைலரிங், டிப்ளோமா இன் ஆரி வேர்க் டிப்ளமோ இன் ப்ரீ ஸ்கூல் டீசிங் டிப்ளமோ இன் கேக் மேக்கிங் மற்றும் டிப்ளோமா இன் ஹெனா ஆகிய கற்கைகளை நிறைவு செய்த 35 மாணவிகள் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இதன் போது ஸாஸ் பியூட்டி சலூன் அன்ட் அகடமி மற்றும் காத்தான்குடி பதுறியா வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் அதிதிகளும் அனுசரணையாளர்களும் நிகழ்வின் பிரதம அதிதியினால் கௌரவிக்கப்பட்டனர்.