பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக்காவல் தொடர்பாக மனிதாபிமான அடிப்படையில் முறையீடு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட எம்.பி. அஜித் பி.பெரேரா சமர்ப்பித்துள்ளார்.
பாகிஸ்தானில் தடுப்புக்காவலில் உள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த கவலைகளை முன்வைத்து இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள், இராஜதந்திர மற்றும் பாராளுமன்ற வழிகள் மூலம் இம்ரான்கானுக்கு போதுமான மற்றும் சுயாதீனமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இப்பிரேரணை மூலம் கோரப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment