கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் உத்தியோகபூர்வ அறிவிப்பு



 


ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுப் படைத் தாக்குதலில் தலைமை மதகுரு கமேனி உயிரிழந்து விட்டதாக ஈரானிய உள்ளூர் செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் கமேனியின் மகள், மருமகன் மற்றும் பேரனும் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும், கமேனி உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி இந்தத் தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் மேற்கொண்டன.


இந்த தாக்குதலில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஒரு மகளிா் தொடக்கப் பாடசாலை  மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 85 மாணவிகள் உயிரிழந்தனா், 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.