ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டாவடியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமனம்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் கட்சித் தலைவர் சட்ட முதுமாணி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களினால் இன்று (21) நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கட்சியின் பிரதித் தலைவர் எம்.எஸ்.அப்துல் வாசித் அவர்களின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அவர்களினால் பாராளுமன்றத்தின் செயலாளர் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளரர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் மௌலவி ஹாமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment