சிரேஸ்ட வழக்கறிஞர், சின்னையா அவர்களுக்கான மகுடம்





மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்க ஏற்பாட் டில், சிரேஷ்ட சட்டத்தரணி சின்னையா அவர்களுக்கான பொன் விழா நிகழ்வுகள் அண்மையில் சிறப்புற இடம்பெற்றது. குறிப்பிட்ட இந்நிகழ்வில், மேல் நீதிமன்ற கௌரவ  நீதிபதிகள், கௌரவ நீதவான்கள், ஓய்வுநிலை நீதிபதிகள் ஆகியோர் உட்பட சிரேஸ்ட கனிஸ்ட சட்டத்தரணிகள் கலந்து சிறப்பித்தனர்.

மட்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தலைவரான சிரேஸ்ட சட்டத்தரணி தியாகேஸ்வரன் தலைமையில் இடமடபெற்ற, இப்பொன் விழாவில், சமூகஞ்சார் தொழிலான சட்டத்துறையில் கடந்த 50 ஆண்டுகளாக சிரேஸ்ட சட்டத்தரணி சின்னையா ஆற்றிய பணிகள் பலராலும் புகழப்பட்டது.