நிருபர் வி.சுகிர்தகுமார்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான உறவுப்பயணம் நிகழ்வுகள் நேற்று முதல் (05)ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையே சகவாழ்வை கட்டியெழுப்புவதில் இளைஞர் யுவதிகள் தங்கள் வாழ்க்கை முறைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை முறையாக அங்கீகரித்து மதிக்க பழக்கப்படுவதை பிரதான நோக்காக கொண்டு இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
இந்த பரஸ்பர சமூக புரிதலின் மூலம் இனங்களுக்கிடையே நட்பை உருவாக்கவும் கலாசார நல்லிணக்கம் ஏற்படவும் இளைஞர் குழுக்களை ஒன்றாக இணைக்கும் இத்திட்டத்திற்கு அமைய மாத்தளை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகைள ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் வரவேற்றனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜெயராஜ் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் ஆகியோர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் கங்கா சாகரிக்கா ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் தர்மதாசா தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ரதீசன் மாத்தளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செனவிரத்தின ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தலைவர் மிருஜன் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாத்தளை மாவட்டத்தில் இருந்து வருகை தந்த இளைஞர் யுவதிகைள ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர் மாலை அணிவித்து நடன நிகழ்வுகளுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து தேசிய கொடியேற்றப்பட்டு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் கலாசார நிகழ்வுகளுடன் ஆரம்பமானது.
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான உறவுப்பயண பரஸ்பர புரிந்துணர்வு நிகழ்வுகள் எதிர்வரும் 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment
Post a Comment