(வி.ரி.சகாதேவராஜா)
உதவும் பொற்கரங்கள் அமைப்பினால் "கல்வி மேம்பாட்டுக்காக கரம்கொடுப்போம்" திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பெரியகல்லாறு புனித அருளானந்தர் வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான பாதணிகள் இன்று (6) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.
உதவும் பொற் கரங்கள் அமைப்பின் ஸ்தாபக தலைவர் பிரபல சமூக சேவையாளர் கனடா விசு.கணபதிப்பிள்ளையின் ( பாண்டிருப்பு) நிதியுதவியில் இப் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் வி.புவிவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகளாக
கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கே.மதிசீலன்,ஒய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர்களான வித்தகர் வி.ரி.சகாதேவராஜா,கண. வரதராஜன், தாயக இணைப்பாளர் என்.சௌவியதாசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment