நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய காரைதீவு கமு/கமு/ கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்ப நலச் சுகாதாரப் பணியாளர் மற்றும் பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் ஆகியோர் இணைந்து முன்னெடுத்தனர்.
நிகழ்வின் போது, மாணவர்களின் தடுப்பூசி நிலை, உடல் நிறைச் சுட்டெண், தொற்றா நோய்கள் மற்றும் கற்றல் குறைபாடுகள் தொடர்பான ஆரம்பகட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் மாணவர்களின் உடல் மற்றும் மனநல நிலையை முன்னதாகவே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பாடசாலை ஆசிரியர்களுக்கும் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நோய்களைத் தடுக்கும் முறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் சிறந்த சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு விளக்கங்களும் வழங்கப்பட்டன.
எமது எதிர்கால தலைமுறையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இத்தகைய மருத்துவ பரிசோதனை திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment