வெளியீட்டு விழா !



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த பழைய மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த பஹ்ரியன் பிரீமியர் லீக் – 3ம் சீசனுக்கான ரியல் சம்பியன் 2K03 அணியின் ஜெர்சி வெளியீட்டு விழா 26.03.2026 அன்று கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் உணவகம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ரியல் சம்பியன் 2K03 அணியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அணியின் எதிர்வரும் போட்டித் தொடருக்கான தயாரிப்புகளும், அணியின் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் நிகழ்வு அமைந்தது.

மேலும், இவ்விழாவிற்கான முழுமையான அனுசரணை, கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் 2003 ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயின்று தற்போது மத்திய கிழக்கில் வசித்து வரும் நண்பர்களினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு, பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து விளையாட்டு வளர்ச்சிக்காக வழங்கும் பங்களிப்பை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.