நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட கமு/சது/ அல்-ஹம்றா வித்தியாலயத்தில், கல்விப் பணியில் இருந்து ஓய்வுபெறும் மற்றும் இடமாற்றம் பெற்று வரும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு, பாடசாலை அதிபர் எஸ்.எச். முஹம்மது பாரீஸ் தலைமையில் நேற்று (26) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், 36 வருடங்களுக்கு மேலான அர்ப்பணிப்பான கல்விச்சேவையை நிறைவு செய்து ஓய்வுபெறும் திருமதி எஸ்.எப். பஷீர் (பாரிஸா) ஆசிரியை மற்றும் வலயக் கல்வி அலுவலகத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், பாடசாலை இணைப்பாளராகவும் பணியாற்றிய பின்னர் ஓய்வுபெறும் திரு. ஏ. அஹமட் லெவ்வை ஆகியோரின் சேவைகள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டன.
மேலும், அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்த ஆசிரியர்களுக்கும் இதன் போது அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக நிர்வாக பிரதிக்கல்வி பணிப்பாளர் பி.எம்.வை. அரபாத் முகைடீன் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக பிரதிக்கல்வி பணிப்பாளர்களான நைரோஸ்கான் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் எம்.டி.எம். ஜனூபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதனுடன், பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில், ஓய்வுபெறும் ஆசிரியர்களின் நீண்டகால அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக கௌரவிக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment