பிரதி அமைச்சர் விஜயம்



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சமய பண்பாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்-ஷேக் முனீர் முழப்பர் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.

பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் விசேட அழைப்பினை ஏற்றே இவ்விஜயம் இடம்பெற்றது. விஜயத்தின் போது, பள்ளிவாசலில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய புனர்நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் தொடர்பாக பிரதி அமைச்சர் விரிவாகக் கேட்டறிந்ததுடன், அவற்றின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார்.