T20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி சற்றுமுன் தொடங்கியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதில் முதலில் களமிறங்கிய அபிசேக் ஷர்மா சஞ்சு செம்சொன் ஜோடி தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் இருவருமே அரைசதங்களை விலாசி அணிக்கு ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 05 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 256 ஓட்டங்களை வெற்றியிலகாக நிர்ணயித்தது இந்திய அணி.
பதிலுக்கு துடுப்பாட களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு 10 ஓவர்கள் நிறைவிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. எனினும் மேரியெட்போன்வோய் அரை சதம் விளாசியிருந்தார்.
அதன் படி நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்து 2026 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத்தை தனதாக்கியது இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
இந்த இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
13வது ஓவரில், அக்சர் படேல் இந்தியாவிற்கு மற்றொரு திருப்புமுனையை வழங்கினார். அவர் டேரில் மிட்செலை ஆட்டமிழக்கச் செய்தார். இது சாண்ட்னர் மற்றும் டேரில் மிட்செல் இடையேயான 52 ரன்கள் கூட்டணியை முறியடித்தது.
முன்னதாக, நியூசிலாந்து அணி 8.1 ஓவர்களில் 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது.

வருண் சக்ரவர்த்தி 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த டிம் சீஃபர்ட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.
நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த க்ளென் பிலிப்ஸை அக்சர் படேல் அவுட் ஆக்கினார்.
ஜஸ்பிரித் பும்ரா ரச்சின் ரவீந்திராவை ஒற்றை ரன்னில் பெவிலியன் திருப்பி அனுப்பினார்.
அக்சர் படேல் இந்தியாவுக்கு முதல் திருப்புமுனையை வழங்கினார். நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலனை 9 ரன்களுக்கு அவர் வீழ்த்தினார்.
End of அதிகம் படிக்கப்பட்டது
முன்னதாக சஞ்சு, அபிஷேக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அரைசதங்களால், இந்தியா 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீஷம் நான்கு ஓவர்களில் 46 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அபிஷேக், சஞ்சு, கிஷன் அரை சதம்
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். இருப்பினும், முதல் ஓவரில் ஏழு ரன்களும், இரண்டாவது ஓவரில் ஐந்து ரன்களும் மட்டுமே எடுத்தனர்.
மூன்றாவது ஓவரில் சஞ்சுவும் அபிஷேக்கும் 15 ரன்கள் எடுத்து ரன் விகிதத்தை அதிகரித்தனர்.
நான்காவது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் அபிஷேக் சர்மா பவுண்டரிகள் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் நான்கு ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது.

2026 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக, இந்திய தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்
அபிஷேக் சர்மா 18 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இந்தியாவின் ஸ்கோர் பவர்பிளேயில் 92 ரன்களை எட்டியது. இது டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராகும்.
இருப்பினும், எட்டாவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 21 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்தார்.

இஷான் கிஷனும் சஞ்சு சாம்சனும் ரன்களின் வேகத்தைக் குறைக்க விடவில்லை. அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 127 ரன்களை எட்டியது.
சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இது சாம்சனின் தொடர்ச்சியான மூன்றாவது அரைசதமாகும். டி20 உலகக் கோப்பையின் இறுதி மற்றும் அரையிறுதி இரண்டிலும் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
14வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், ரச்சின் ரவீந்திராவின் பந்து வீச்சில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.

இதற்கிடையில், இஷான் கிஷன் 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 45 பந்துகளில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தியாவின் ஸ்கோர் வெறும் 15 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்தது.
16வது ஓவரில் சஞ்சு, கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தி, நீஷம் நியூசிலாந்தை மீண்டும் ஆட்டத்திற்குக் கொண்டு வந்தார்.சஞ்சு சாம்சன் 89 ரன்களும், கிஷன் 54 ரன்களும் எடுத்தனர்.

இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
ஹர்திக் பாண்ட்யாவும் நீண்ட நேரம் கிரீஸில் நீடிக்க முடியாமல் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து இறுதியில் அதிரடி காட்டினார். திலக் வர்மா எட்டு ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

கேப்டன்கள் கூறியது என்ன?
"நாங்களில் முதலில் பேட்டிங் செய்வதை சிறப்பாக செய்துகொண்டிருப்பதால், இன்று முதலில் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சி தான். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி போன்ற ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த பெரிய ஸ்கோர் பதிவு செய்து எப்போதுமே நல்ல விஷயம்" என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.
இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், "இந்திய அணியில் நிறைய அதிரடி பேட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை சேஸ் செய்யக்கூடிய ஒரு ஸ்கோருக்குள் கட்டுப்படுத்தவேண்டும்" என்று கூறினார்.
நியூசிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் கோல் மெக்கான்கீ நீக்கப்பட்டு வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃபி சேர்க்கப்பட்டார்.
இந்தத் தொடரில் சேஸ் செய்த 4 போட்டிகளிலுமே நியூசிலாந்து வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன்
இந்தியா: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா.
நியூசிலாந்து: டிம் செய்ஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, மார்க் சேப்மேன், கிளென் ஃபிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, லாக்கி ஃபெர்குசன்






Post a Comment
Post a Comment