ஆலையடிவேம்பு நிருபர்
இதன் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக 'சமுர்த்தி அபிமானி' புத்தாண்டு சந்தையினை நடாத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில்; சமுர்த்தி அபிமானி புத்தாண்டு சந்தையினை இன்று(10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் அருகாமையில் நடாத்தப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் க.நேசராஜா தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில்; பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்; மற்றும் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாபாவின் இணைப்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளருமான ஆர்.ரதீசன் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைன்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நிம்சத் முகாமைத்துவ பணிப்பாளர் த.பரமானந்தம் சிரேஸ்ட கருத்திட்ட முகாமையாளர் ரி.கமலபிரபா கருத்திட்ட முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன்; சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான கவிதா கிருதாசன் எஸ்.சுரேஸ்காந் நிருவாக கிராம அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டார்; உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பிரிவினரால் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்க்கப்பட்ட அதிதிகள் வியாபார நிலையங்களை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.
இதன் பின்னராக சிறந்த தொழில் முயற்சியாளர் இருவருக்கான சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் 10 இலட்சம் கடன் ஒருவருக்கும் வீடு அமைப்பிற்கான காசோலை இருவருக்கும்; வழங்கி வைக்கப்பட்டது.
பின்னர் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களை பார்வையிட்டதுடன் கொள்வனவிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் பல்வேறு உற்பத்தி பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்


Post a Comment
Post a Comment