உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் www.ceylon24.com குழுமத்தின் பராபவ" (Parabhava) சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த ஆண்டு பிறக்கவுள்ள தமிழ் வருடத்தின் பெயர் "பராபவ" (Parabhava) வருடம் ஆகும். இது 40ஆவது ஆண்டாகும். 60-வது ஆண்டான 'அட்சய' முடிந்தவுடன், மீண்டும் 1-வது ஆண்டான 'பிரபவ' தொடங்கும்.
அரசாங்க ரீதியாகப் பயன்படுத்தப்படும் திருவள்ளுவர் ஆண்டு, கிறிஸ்து பிறப்பிற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது (தற்போதைய ஆங்கில ஆண்டு + 31 = திருவள்ளுவர் ஆண்டு). எனவே தற்போது 2057 ஆவது திருவள்ளுவர் ஆண்டாகும்.
புத்தாண்டின் முக்கிய சிறப்புகள்
சித்திரை கனி காணுதல் : புத்தாண்டு அன்று அதிகாலையில் விழித்ததும் முதலில் மங்களகரமான பொருட்களைப் பார்ப்பது வழக்கம். தங்கம், வெள்ளி, பணம், முக்கனிகள் (மா, பலா, வாழை), பூக்கள் மற்றும் கண்ணாடி அடங்கிய தட்டை முதல் நாள் இரவே தயார் செய்து வைத்து, மறுநாள் காலையில் அதைப் பார்ப்பார்கள். இது அந்த ஆண்டு முழுவதும் செழிப்பைத் தரும் என்பது நம்பிக்கை.
தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கொட்டும் பணம்.. திருமணத்தில் கவனம்
தமிழ் புத்தாண்டு பலன்: மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. கொட்டும் பணம்.. திருமணத்தில் கவனம்
அறுசுவை பச்சடி: வாழ்வில் இன்பம், துன்பம், கசப்பு என அனைத்தும் கலந்தே இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக வேப்பம்பூ (கசப்பு), மாங்காய் (புளிப்பு), வெல்லம் (இனிப்பு), மிளகாய் (காரம்) ஆகியவற்றைச் சேர்த்து பச்சடி செய்து உண்பார்கள்.
பஞ்சாங்கம் வாசித்தல்: கோவில்களில் அன்றைய தினம் 'புத்தாண்டு பலன்கள்' அடங்கிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். அந்த ஆண்டில் மழைப் பொழிவு, விவசாயம் மற்றும் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
2026 புத்தாண்டு - முக்கிய நேரங்கள்


Post a Comment
Post a Comment