மத்திய கிழக்கு யுத்த நிலைமையுடன் நாட்டின் பல துறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் துறைகள் குறித்து கவனம் செலுத்தி சில மானியங்களை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
எரிபொருள் மற்றும் வலுசக்தி துறைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருளை செலவுக்கு ஏற்ப சந்தையில் விற்பனை செய்யுமாறு ஒரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது. எரிபொருளுக்கான செலவை பாராது மானியம் வழங்குமாறு மற்றொரு பரிந்துரை முன்வைக்கப்பட்டது. முதலாவது பரிந்துரையை அமுல்படுத்துவதால் திறைசேரிக்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் மின்சார சபைக்கும் பாதிப்பு ஏற்படாது.
ஆனால் பொருளாதாரத்திற்கும் கைத்தொழில்களுக்கும் வர்த்தகர்களுக்கம் அன்றாட வாழ்விற்கும் தாக்கம் ஏற்படும். எரிபொருள் உயர்வுக்கு அமைவாக சந்தை விலைக்கமைய வழங்கினால் ஒரு லீட்டர் டீசலை 600 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். அதில் 50 ரூபா வரி உள்ளது. இதனை நீக்கினால் லீட்டருக்கு 50 ரூபா தான் கட்டணம் குறையும்.
வரியை மாற்றாமல் விற்கும் ஒவ்வொரு லீட்டர் டீசலுக்கும் 100 ரூபா வரை திறைசேரியில் ஒதுக்க இருக்கிறோம். எரிபொருள் செலவை முந்தைய மாத எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டு டீசலுக்கு 100 ரூபா வரை மானியம் வழங்கலாம் . பெற்றோலுக்கு 20 ரூபா மானியம் வழங்கப்படும். 3 மாதத்திற்கான பரிந்துரைகளை தயாரித்துள்ளோம்.
தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கே இந்த மானியம் வழங்க வேண்டும். சாதாரண ஒருவர் 10 லீட்டர் எரிபொருள் பெற்றோல் அவருக்கு 1000 ரூபா மானியம் கிடைக்கும். அதிக எரிபொருள் பயன்படுத்தும் வாகனம் உள்ள ஒருவர் 100 லீட்டர் பெற்றால் அவருக்கு 10 000 ரூபா சலுகை கிடைக்கும். ஆனால் இதற்காக எம்மிடம் முறையான தரவுகள் கிடையாது. அதனால் தான் சுப்பர் டீசல் மற்றும் சுப்பர் பெற்றோல் விலைகளை சந்தை விலைக்கு ஏற்ப தீர்மானிக்க முடிவு செய்தோம்


Post a Comment
Post a Comment