திருகோணமலையில் ரயில் இயந்திரத்தில் திடீர் தீப் பரவல்



 


திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் வளாகத்துக்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. 


சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.