பாடசாலை மலசலகூடங்கள் சுகாதார பரிசோதனை



 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் உள்ள மலசலகூடங்கள் இன்று விரிவான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மாதன் அவர்களின் வழிகாட்டலும் ஆலோசனையும் ஏற்ப மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுகாதாரத் தரநிலைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டது.

இதன் போது, மலசலகூடங்களின் சுத்தம், போதுமான நீர் வசதி, கழிவுநீர் வடிகால் அமைப்பின் நிலை, மற்றும் மாணவர்கள் பாதுகாப்பாக பயன்படுத்தக்கூடிய சூழல் ஆகிய முக்கிய அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

பரிசோதனையின் போது காணப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய பள்ளி நிர்வாகங்களுக்கு தேவையான ஆலோசனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.